Latest Games

கைமாறிய கனவுகளோடு களங்காணும் 2ம் லெப் மாலதி படையணி.



கைமாறிய கனவுகளோடு களங்காணும் 2ம் லெப் மாலதி படையணி.

ஈழத் தமிழ் உறவுகளை விடுதலை செய்யக் கோரி யேர்மனியில் உள்ள ஆஸ்திரேலியா தூதரகத்தில் மனு கையளிப்பு



அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 42 பேர் ஈழத் தமிழர்கள் பல வருடங்களாக காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

வராமல் வந்த வரமாக வந்துதித்தவன் பாலச்சந்திரன்.



வராமல் வந்த வரமாக '
வந்தவன் எங்கள் கரிகாலன்.
அவன் வாழ்வின் திவ்விய பயனாக
வந்துதித்தான் பாலச்சந்திரன் !

இனம் தமிழர் வாழ்விலே ;
ஒளியேற்றி வைத்தான் அப்பன்;
அவன் இதயம் நொறுங்க
வாழ்வை முடித்தான் - எங்கள்
மனதில் வாழும் சந்திரன்.

பச்சை பசுந்தளிரென - பாராமல்
பாய்ந்து குதறிய சிங்களமே !
பச்சை இரத்தத் தாகத்துடன்
மீண்டும் வருவோம் விரைவினிலே !

காலம் வருகிறது எங்களுக்கும் "
காத்திருக்கிறோம் எதிரிகளே !
சிங்கத்தை காட்டினிலே
வேட்டையாட !
புலிப்படை கொண்டு வருவான் சீக்கிரமே !

தினம் தினம் இதைத்தான்
எதிர்பார்த்து
நாங்கள் திமிறியெழுகிறோம் ;
தமிழ்நாட்டில்.
மீண்டும் வருவோம் !
மீண்டும் வருவோம் !

பாலச்சந்திரன் சாந்தியடைய
சிங்களத்திற்கு
பாடையொன்றை உருவாக்கி
வருவோம் !

நாங்கள் திமிறியெழுகிறோம் ;
தமிழ்நாட்டில்.
மீண்டும் வருவோம் !
மீண்டும் வருவோம் !

பாலச்சந்திரன் சாந்தியடைய
சிங்களத்திற்கு
பாடையொன்றை உருவாக்கி
வருவோம் !

மன்னார் மனித புதை குழி தோண்டப்பட்டு மனித எலும்புத்துண்டுகள் சில கண்டு பிடிப்பு.




மன்னார் திருக்கேதிஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதை குழி மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை (21-01-2014) காலை மன்னார் நீதவான் முன்னிலையில் 10 ஆவது தடவையாக தோண்டப்பட்டது. எனினும் எவ்வித மனித எலும்புக்கூடுகளும் முழுமையாக மீட்கப்படவில்லை.

இது வரை 40 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும்,துண்டுகளாகவும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மன்னார் நீதவானின் உத்தவிற்கமைவாக நேற்று திங்கட்கிழமை (20-01-2014) மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை(21-01-2014) குறித்த பகுதியில் உள்ள வீதி உடைக்கப்பட்டு மனித எலும்புக்கூடுகள் மீட்கும் பணி இடம் பெற்றது.

இதன் போது இன்று செவ்வாய்க்கிழமை புதிதாக தோண்டப்பட்ட பகுதியில் மனித எலும்புத்துண்டுகள் சில கண்டு பிடிக்கப்பட்டது.

எனினும் இன்று செவ்வாய்க்கிழமை முழுமையாக மனித எலும்புக்கூடுகள் எவையும் கண்டு பிடிக்கப்படவில்லை.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை குறித்த பணி இடம் பெற்றது.

எனினும் இன்று மனித எலும்புக்கூடுகள் எவையும் முழுமையாக கண்டு பிடிக்கப்படாத நிலையில் குறித்த பணி 2 மணியுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு மீண்டும் நாளை புதன் கிழமை(22-01-2014) மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் குறித்த மனித புதை குழி தோண்டப்படவுள்ளது.

குறித்த மனித புதை குழி தொடர்பாக அனுராதபுர சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ன கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் திருக்கேதிஸ்வரம் மனித புதை குழியில் இருந்து மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் அதன் மரணம் சம்பவித்த விதத்தினை அறிந்து கொள்ள நீண்ட நாட்கள் எடுக்கும்.

குறித்த மனித புதைகுழியில் இருந்து தொடர்சசியாக மனித எலும்புக்கூடுகள் மாத்திரமே மீட்கப்பட்டு வருகின்றது.

பாரிய அளவிலான தடையப்பொருட்கள் எவையும் இது வரை மீட்கப்படவில்லை.
குறித்த மனித புதை குழியின் எல்லை எது வரை உள்ளது என்பதனை கண்டு பிடிக்க முடியாத நிலையில் உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.




” திம்புப் பேச்சுவார்த்தை “




ராஜிவ் காந்தியின் தலைமையில் இந்திய அரசு இலங்கைத்தீவின் இனப்பிரச்சினையை தன் விருப்பத்திற்கு ஏற்ப கையாளத் தொடங்கி, ஈடுபட்டுவந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீது அழுத்தங்களைப் போட்டு, 1985இன் ஆரம்பத்திலிருந்தே தலைவர் பிரபாகரனின் தலைமையில் கெரில்லா நடவடிக்கைகளில் 1985 ஆனி 18இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அதே ஆண்டின் ஆடிமாத முற்பகுதியில் இந்திய அரசின் மத்தியத்துவத்தின் கீழ் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பமாயின.

சகல தமிழ் குழுக்களும் கலந்து கொண்டன. தமிழர் தேசியம் தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மற்றைய தமிழ் குழுக்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இக் கோரிக்கையைச் சிங்கள அரசு நிராகரித்தது. இப்படியாகச் சிக்கலடைந்த திம்புப் பேச்சு வார்த்தைகள், போர் நிறுத்தத்தை மீறி சிங்களப்படைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலையில் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முறிவடைந்தன. இந்நேரத்தில் தமிழீழத்தில் தன் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை பற்றிய நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இதனால் தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் பாரிய முரண்பாடும் இடைவெளியும் ஏற்பட்டது. ஆனால் இந்தியா பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை தலைவர் பிரபாகரன் பின்வருமாறு கூறியிருக்கிறார். ~~எமக்கு இந்தியாவின் உதவியும் நல்லெண்ணமும் அவசியம். அதே வேளையில் இந்தியா தனது தீர்வைத் தமிழீழ மக்கள் மீது திணிப்பதை நாம் விருப்பவில்லை. தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் முழு உரிமையும் எமது மக்களுக்கு உண்டு~~ என்று.

ஆனால் இந்திய அரசும் அதன் பிரதமரும் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ மக்களின் விடுதலையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அப்போதைய தமிழக முதல்வருக்கு அழுத்தங்களைக் கொடுத்து, 1986ம் ஆண்டு ஐப்பசியில் தமிழக காவற்துறை மூலம் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த தகவல் தொடர்புச் சாதனங்களைப் பறித்தார்கள். தலைவர் பிரபாகரனையும் மற்றைய போராளிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று குற்றவாளிகளை நடத்துவது போன்று நடத்தினார்கள்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

புரிதல் கொள்ளும் நேரம் !!


 கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற் சபை ஈசன் செவ்விக்கு என் தாழ்மையான பதில் கருத்துக்கள். நல்லதை பாராட்டியும் அல்லதை கண்டித்தும்.. எழுதிய இந்த பதிவு காழ்புணர்வோடு எழுதப்பபடவில்லை மாறாக ஒரு சக தமிழச்சியென்ற சகோதரத்துவத்துடன் எழுதுகின்றேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டுகின்றேன். பகுதி 1 உங்களை வெறுத்தோ கோபப்பட்டோ என் எந்த பதிவுகளையும் நான் இங்கு பதியவில்லை ராதிகா. என் மனதுக்கு தவறு என பட்டவற்றை குறிப்பிடுவது என் தேசியக் கடன் என நினைக்கின்றேன். ஒரு தமிழ் பெண்ணாக உங்கள் வளர்ச்சி எமக்கும் பெருமையே. முதல் தமிழ் பெண் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையோடு பாராளுமன்றத்தில் தமிழில் உரையாற்றி அவ்வப்போது எமக்காக சிறு சிறு குரலாவது குரல் எழுப்புகின்றீர்கள் எனபதும் மகிழ்ச்சியே. நெருக்கடிக்கும் எம் மக்கள் வாழும் வலிகளை நீங்கள் பார்த்து பகிர்கின்றமை மகிழ்ச்சியே. நில அபகரிப்புக்களை செய்து வரும் இனப்படுகொலையின் கூறுகளை தொடர்ந்து வரும் ஸ்ரீலங்கா அரசின் கோர முகத்தை தோலுரித்து காட்டியமைக்கு பாராட்டுக்கள். "நாடே இராணுவ முகாம்" என்ற பதிவும் இலங்கை அரசு எம் இனத்துக்கு இன்றளவும் தொடரும் அநீதிகளையும் உண்மைகளாக எடுத்து வந்தமைக்கு பாராட்டுக்கள். பகுதி 2 நடந்தது இனப்படுகொலை என உலகமே கூறும் நிலையில் உச்சக் கட்ட போர் நடந்தது போல் இல்லை என கூறும் உங்கள் கூற்று ஒரு இனத் துரோக கருத்து. பொறுப்பற்ற பதில்கள்..பக்குவம் இல்லாதவை. தயவு செய்து தெளிவு பெறுங்கள். அழிவுகளை ஆவணப் படுத்தும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற மாந்த நேயப் பணியாக தமிழர் உரிமைகள் பற்றிய ஆய்வு அறிக்கைகள் பணிகள் தொடர வாழ்த்துக்கள். உலக மனித உரிமை அமைப்புக்கள் அரசுக்களுடன் இணைந்து இந்த செயல்பாடுகளை செய்யும் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். பிறந்த மண்ணுக்கு நான் ஒரு அரசியல் வாதியாக அடையாளப்படுத்தி மட்டுமே போகும் தேவை இருக்க்கக் கூடாது என்ற கருத்துக்கு பாராட்டுக்கள். சுற்றுலா விசாவில் வந்த எல்லோரையும் துரத்துவார்களா? ஒரு அரசியல் பிரமுகருக்கே இந்த நிலை என்றால் மற்ற மக்களுக்கு???? தனிமனித உரிமை இன்னொரு நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்க்கே மறுக்கப்பட்ட நிலையில் சாதாரண அப்பாவி பொது மக்கள் எப்படியான சூழலில் அச்சுறுத்தலின் கீழ் மூச்சை கூட சுதந்திரம் இழந்து விட்டு கொண்டு இருக்கிறார்கள் என புரிந்து கொள்ளுங்கள். இந்த நிலையில் அவர்கள் உள்ளத்தில் இருப்பதை அவர்கள் சொல்வார்களா? பகுதி 2: நடந்தது இனப்படுகொலை என உலகமே கூறும் நிலையில் உச்சக் கட்ட போர் நடந்தது போல் இல்லை என கூறும் உங்கள் கூற்று ஒரு இனத் துரோக கருத்து. பொறுப்பற்ற பதில்கள்..பக்குவம் இல்லாதவை. தயவு செய்து தெளிவு பெறுங்கள். அழிவுகளை ஆவணப் படுத்தும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற மாந்த நேயப் பணியாக தமிழர் உரிமைகள் பற்றிய ஆய்வு அறிக்கைகள் பணிகள் தொடர வாழ்த்துக்கள். உலக மனித உரிமை அமைப்புக்கள் அரசுக்களுடன் இணைந்து இந்த செயல்பாடுகளை செய்யும் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். பிறந்த மண்ணுக்கு நான் ஒரு அரசியல் வாதியாக அடையாளப்படுத்தி மட்டுமே போகும் தேவை இருக்க்கக் கூடாது என்ற கருத்துக்கு பாராட்டுக்கள். சுற்றுலா விசாவில் வந்த எல்லோரையும் துரத்துவார்களா? ஒரு அரசியல் பிரமுகருக்கே இந்த நிலை என்றால் மற்ற மக்களுக்கு???? தனிமனித உரிமை இன்னொரு நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்க்கே மறுக்கப்பட்ட நிலையில் சாதாரண அப்பாவி பொது மக்கள் எப்படியான சூழலில் அச்சுறுத்தலின் கீழ் மூச்சை கூட சுதந்திரம் இழந்து விட்டு கொண்டு இருக்கிறார்கள் என புரிந்து கொள்ளுங்கள். இந்த நிலையில் அவர்கள் உள்ளத்தில் இருப்பதை அவர்கள் சொல்வார்களா? பகுதி 3 ராதிகா நீங்கள் மொத்தம் எத்தனை தமிழர்களை சந்தித்தீர்கள்? ஈழ விடுதலைக்காக உயிர் கொடுத்து போராடிய மக்கள் சோற்று பிண்டங்கள் அல்ல. இன்று அச்சத்தில் தம் உணர்வுகளை உங்களுடன் பகிர மறுத்திருக்கலாம்... அவர்களுக்கு உங்களை நம்பி பதில் சொல்லும் அளவு உங்களுடன் அவர்களுக்கு நம்பிக்கையோ நெருக்கமோ இல்லாது இருக்கலாம்... மனித உரிமை அமைப்புகளிடம்.. வெற்றி பிரமுகர்களிடம்.. வாய் விட்டு அழும் மக்கள் உங்களை தமிழ் ஒருவராக எண்ணி அழவில்லையே... அச்சம்...அச்சம்..எந்த புற்றில் எந்த பாம்பு என்ற அச்சம்...கேள்வியை கேட்டுவிட்டு போய் விடுவீர்கள் ..இதில் என்ன பயன்? இப்படி நினைப்பவர்கள் இருப்பார்கள்.. அனந்தி அக்காவிடம் நீங்கள் கேட்டு தெரிந்திருக்கலாமெ? அந்த மக்களின் அவலத்தை இங்கிருந்து விடுமுறைக்கு சென்று வரும் அரசியல் வாதிகள் சொல்வதை விட ஆனந்தி அக்கா போன்ற உண்மையாக தொடர்ச்சியாக அடக்குமுறைகளை எதிர்த்து போராடும் அரசியல் பிரதிநிதிகள் சொல்ல வேண்டும். பகுதி 4 "எல்லோருமே தமது தமது எண்ணத்தில் செயல்படுகின்றார்கள்..." "வீரவசனம் பேசும் புலத்து தமிழர்கள்" என செயல்படுபவர்களை விமர்சிக்கும் ராதிகா எம் இனத்திற்கு பணி செய்ய ஒன்று பட்டு செயல்பட அயராமல் புலத்தில் இருந்து தாயகம் நோக்கி செயல்பாடுகளை செய்து கொண்டிருக்கும் புலம் பெயர் செயற்பாட்டாளர்களோடு தன்னை இணைத்து செயல்படுவதில் தனது முழுமையான அக்கறையை காட்டலாமே? இன்றளவும் அத்தகைய செயற்பாடுகளில் இப்படி பேசும் பலர் தம்மை இணைத்துக் கொண்டதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். மண்ணில் உள்ள உறவுகளோடு கனடாவில் வாழும் உறவுகள் நேரடி தொடர்புகள் உள்ளவர்கள் என்பதை மறந்து தாயகத்தில் வாழும் எம் மக்களது அபிலாசைகளை உணராமல் புலத்தில் உள்ளவர்கள் விடுதலைக்காக அவர்கள் விடியலுக்காக போராடுவது தவறு என்பது போல் விமர்சிப்பது கண்டனத்திற்குரியது. வெறும் சோறும் உடுப்பும் படுக்கும் பாயும் போதும் என வாழ்ந்த இலக்கற்ற மக்கள் அல்ல எம் மக்கள். இன்று ஆயுத முனையில் வறுமை வாழ்வில் சோறு மட்டும் போதும் என அவர்கள் சொல்வார்கள். அதுவும் எல்லோரும் அல்ல..மிகச் சிலர். அப்படி சிலரை மட்டுமே சகோதரி சந்தித்திருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். விடுதலைக்காக பல உயிர்களை கொடுத்து விட்டு இன்றும் விடுதலை மட்டுமே எம் தேவை என கூறும் எம் மக்களை அவர் சந்திக்கவில்லை போலும். எம் மக்கள் பட்ட வலிகளை போராட்டங்களை அத்தனையூடாகவும் அவர்கள் எதற்காக போராடினார்கள்... இனியும் அவர்கள் அடிமையாக இயல்பு வாழ்வை சிங்கள தேசத்தில் வாழ்வது சாத்தியமா? எல்லாவற்றையும் தயவு செய்து ஆராய்ந்து உணர்ந்து பேசுங்கள் சகோதரி ராதிகா. எம் மக்களின் வறுமையை நாம் போக்க வேண்டும். புலத்து தமிழர்கள் கடன் அது. உண்மை. அதே போல் நிரந்தர விடுதலையை மாந்த நேயம் உள்ள ஒட்டு மொத்த உலகமுமே பெற்று கொடுக்க வேண்டும். அடிமைகளாக இன வெறியர்களுக்கு இரையாகி எம் இனம் நிரந்தர அடிமைகளாக சந்ததிகள் கடந்தும் வாழ முடியாது. அந்த வலி இவருக்கு புரியாதது வேதனை. எம் மக்களுக்கு குரல் அங்கு இல்லை என ஒத்துக் கொள்ளும் தாங்கள் அத்தகைய சூழலில் எம்மை அங்கிருந்து இன்று ஒரு தலைமை வழி நடத்த வேண்டும் என கூறுவது நகைசுவையாக இல்லையா? சோறும் தண்ணியும் மட்டும் தான் வேண்டுவது.. விடுதலை இல்லை எனப் பேசுவது நேர்மையான கூற்றா? 'ஒற்றுமை வேண்டும் எமக்குள்' என அவர் சொல்வது சரி தான்..மதிக்கின்றேன்..ஆனால் அதற்காக நாம் ஒவ்வொருவரும் என்ன செய்திருக்கின்றோம்? எதுவும் செய்யாதவரை விட 10% விழுக்காடு பணியையாவது எம் மக்களுக்கு தொடர்ச்சியாக செய்பவன் உயர்ந்தவனல்லவா? விடுமுறை சுற்றுலாவுக்கும் அரசியலுக்கும் மட்டும் எம் மக்களை சென்று பார்வையிட்டு செய்தியை பதிவு செய்யும் சில அரசியல்வாதிகள்..எம் இனத்தின் வலியை தமகேற்றாற்போல் பருவகால அக்கறையாக பேசுபொருளாக்கி அரசியல் செய்வது வலி தருகிறது... உறவுகளை பறி கொடுத்த வலியோடு வாழும் உறவுகளின் கண்ணீரை ஏன் இந்த கனடிய மண்ணில் இவர்கள் பார்த்து பேசியதில்லை? நான் பெரியவன் என்ற எண்ணம் எவருக்கு உண்டு? எம் இனத்தின் அவலத்தை ஜெனீவாவில் சென்று சொல்லும் வாய்ப்பை கூட பயன்படுத்த தவறியது ஏன்? எம் இனத்தின் தேவை என்ன என உண்மையாக புலத்தில் இருக்கும் செயற்பாட்டாளர்களை விமர்சிக்க தற்காலிக கண்ணீரை வடித்து கருத்துரைக்கும் போலி அரசியல்வாதிகளுக்கு எந்த அருகதையும் இல்லை. இதுவரையில் நாம் ஒவ்வொருவரும் எம் இனத்தின் விடுதலைக்காக கண்ணீரை போக்க எதை செய்தோம்? அடுத்தவரை குறை சொல்வதை கடந்து நாம் இதுவரையில் ஏதேனும் சாதனைகள் செய்தோமா? ஒவ்வொருவரினதும் மனச்சான்றே இதற்கு பதில் சொல்ல வேண்டும். ராதிகா இருக்கும் கட்சியின் முன்னாள் தலைவர் மறைந்த தமிழர்களின் உற்ற நண்பர் ஜாக் லேடன் எம் இனத்திலும் விடுதலை விரும்பிகளிலும் பெருமதிப்பும் பற்றும் வைத்திருந்தவர். எமக்காக தொடர்ச்சியாக தனது கொடும் நோய்கள் நடுவிலும் மழையில் நனைந்து கூட உரையாற்றி குரல் கொடுத்தவர். வேற்றினத்தவர் என எண்ண முடியாதவாறு எமக்கு தொடர்ச்சியாக இறுதி வரை குரல் கொடுத்த அவருக்கு புலத்து தமிழர்களில் இருக்கும் நம்பிக்கை கூட ஒரு தமிழச்சியாக இவருக்கு இல்லை என்பது கேள்விக்குரியதே.. ஒவ்வொருவரும் தன்னால் முடியுமான பணிகளை செய்வது மக்கள் சேவையாகாது. தன்னால் முடியாததையும் யார் எதிர்த்தாலும் பகைத்தாலும் இதய சுத்தியோடு அயராமல் தொடர்ந்து மக்களுக்காக செய்பவனே உண்மையான மக்கள் சேவையாளன். இலங்கை அரசியல் விவகாரத்தில் ராதிகாவின் சில கருத்துக்கள் ஏற்புடையவை. ஆனால் புலத்து தமிழர்கள் பற்றிய அவரது பார்வையில் ஆழம் இல்லை. மாறாக தனது தனிப்பட்ட காழ்ப்புணர்வு பார்வையின் கசப்புணர்வு வெளிப்பாடே தெரிகின்றது. ஒருமித்த குரலோடு பலத்த குரலாக ஒற்றுமையாக குரல் கொடுக்க விரும்பும் அவரது ஆசை இதய சுத்தியோடு வெளிப்பட்டது என்றால் பாராட்டுக்கள். அடிப்படையில் ஒரு தமிழச்சியாக எம் இனத்திற்கு அங்கு குரல் இல்லை என்ற பதிவையாவது தெளிவாக உண்மையை உணர்ந்து பதிவு செய்தமைக்கு பாராட்டுக்கள். பகுதி 5: இலங்கை அரசின் நிதி மோசடி பற்றி எடுத்து வந்தமைக்கு பாராட்டுக்கள் ராதிகா. போர்க்காலத்தை விட கொடிய காலத்தில் இன்று எம் மக்கள் வாழ்கின்றார்கள்.. அடுத்து என்ன என்று உணர முடியாத கொடுமைக்குள் எம் மக்கள்... நன்றி சகோதரி... எந்த மனிதர்களுக்கும் மாந்த நேயம் பொது. நாமும் மனிதர்கள் என்பதில் தான் உலகுக்கு ஏனோ இன்னமும் சந்தேகம்... ஒற்றுமை என்பதை நீங்களும் நேசிகின்றீர்கள் ... நாங்களும் நேசிகின்றோம்... இனி வரும் காலத்திலாவது உங்கள் கனவு.. எம் கனவு.. சாத்தியமாகும்..ஆனால் தமிழீழ கனவை விட்டு விட்டு வருமாறு சொல்லும் எண்ட ஒற்றுமை பேச்சும் எம் மக்களுக்கு நேர்மையான ஒரு முடிவாகாது! அதில் உங்களை நீங்கள் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். இருக்கும் இடத்தில இருந்து எம் தேசம் நோக்கி, எம் மக்கள் நோக்கி எம் விடுதலை நோக்கி எம்மால் இயன்றதை விட அதிகமாக உழைத்து எம் விடுதலையை வென்றெடுக்க ஒன்று பட்ட தமிழினமாக உழைப்போம்.

எதிரிக்கும் இவன் நேர்மை பிடிக்கும் !!

பிரபாகரன்
இராணுவத்தை தாக்கினார்
ராஜபக்சே
பொதுமக்களை தாக்கினான்
படை நடத்தியவனே
பறைசாற்றுகின்றான்
உலக நாடுகளே
மனித உரிமை ஆர்வலர்களே
போர் குற்றவாளி மீது
நீதி விசாரணை கொண்டுவாருங்கள்


நாம் போராடத் தவறிவிட்டால், தமிழனற்ற நிலமாகத் தமிழீழம் மாறிவிடும்!


நாம் போராடத் தவறிவிட்டால், தமிழனற்ற நிலமாகத் தமிழீழம் மாறிவிடும்! புலம்பெயர் தமிழர்களது அதி உச்ச யுத்த தினமாக மார்ச் 10 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுவிட்டது. முள்ளிவாய்க்கால்வரை சிங்கள தேசத்தால் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை நாட்களில் தாம் வாழும் நாடுகளின் தெருக்களை நிறைத்து நின்று போராடிய புலம்பெயர் தமிழினம், ஐந்து ஆண்டுகளின் பின்னர் ஒன்றாக எழுந்து போராடப் புறப்பட்டுக்கொண்டுள்ளன. ஒவ்வொரு நாட்டின் தேசியத் தளங்களும், தங்கள் மக்களின் எழுச்சிக்கான அறிவித்தல்களை வெளியிட்டுள்ளதுடன், அவர்களுக்கான பயண ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், மேற்குலகின் தேசியத் தளங்கள் ஒற்றைக் கருத்துடன் ஒன்றிணைந்துள்ளன. இது, ஒட்டு மொத்த தமிழினத்தையும் எழுச்சி கொள்ள வைத்துள்ளது. சிங்கள தேசம் நேர்த்தியாகக் கையாண்ட தமிழ்த் தேசிய தகர்ப்புச் சதிகளைப் புரிந்து கொண்டு, புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்கள் தம்மை தமிழ்த் தேசிய இலக்கு நோக்கி மீள் எழுச்சி கொள்ள வைத்துள்ளன. மாவீரர்களது கனவும், தேசியத் தலைவர் அவர்களது கட்டளையும் மட்டுமே தமக்கானது என்ற தெளிவு மீண்டும் உருவாக்கப்பட்டு விட்டது. அது, பெரும் மக்கள் பேரெழுச்சிக்கு வகை செய்துள்ளன. புலம்பெயர் தமிழ் மக்களது இன்றைய ஒற்றைச் சிந்தனையாக மார்ச் 10 மட்டுமே உள்ளது. எதிரியை நோக்கி விடுதலைப் புலிகள் அணி வகுத்தது போலவே, புலம்பெயர் தமிழர்கள் அனைத்துலக மன்றத்தில் எதிரியை வீழ்த்துவதற்காக ஜெனிவா நோக்கி அணி வகுத்துள்ளனர். அடக்கி ஒடுக்கப்பட்ட நிலையிலும், இராணுவ ஆக்கிரமிப்புக்கு நடுவிலும் நின்றுகொண்டே, வட மாகாணசபைத் தேர்தவில் தங்களது ஜனநாயகப் போர் மூலம் சிங்களக் கனவுகளை அடித்து நொருக்கிய வட தமிழீழ மக்களைப் போலவே, புலம்பெயர் தமிழர்களும் ஜெனிவா போர்க் களத்தில் சிங்களக் கனவுகளைத் தகர்த்து, தமிழீழ மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் ஜனநாயகப் போரின் உச்சமாக ஜெனிவா போர்க் களத்தை நோக்குகின்றார்கள். எங்கள் தேசத்தின் கனவை, மாவீரர்களது இலட்சியத்தை, எங்கள் தேசியத் தலைவரின் வழிகாட்டலை நிறைவேற்றும் வல்லமையும் கடமையும் புலம்பெயர் தமிழர்களுக்கே உள்ளது. புலம்பெயர் தமிழர்களது போராட்ட வல்லமையே இன்று சக்தி மிக்க தேசங்களையும் தமிழீழ மக்களது அவலங்கள் குறித்துப் பேச வைக்கின்றது. தமிழகத்தை ஆவேசம் கொள்ள வைக்கின்றது. ஜெனிவாவில் புலம்பெயர் தமிழர்கள் நடாத்தப்போகும் வரலாற்றுப் பதிவாகப் போகும் போராட்டம், சிங்களத்தின் பொய்யுரையாலும், அணி சேர்க்கையாலும் தடம் மாறி நிற்கும் தேசங்களையும் எம் பக்கம் திரும்பச் செய்யும். நியாயங்களை எப்போதும், யாராலும் மறுதலிக்க முடியாது. நீதியை பொய்யினால் மூடி வைத்துவிட முடியாது. கொடூரமான இனவெறியர்களுடனான எங்களது ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு விட்டாலும், எங்களுக்கான ஜனநாயகப் பாதை உலகெங்கும் திறந்தே கிடக்கின்றது. அதனை வென்றெடுத்து, உலகின் மனச்சாட்சியை எமது பக்கம் திருப்பிவிட்டால், எமக்கான எங்கள் தேசத்தின் விடிவுக்கு அதிக தூரம் இருக்கப் போவதில்லை. மண்ணுக்காய் மரணித்த மாவீரர்களையும், அந்த மண்ணிலே உயிர் துறந்த மக்களையும், தாயகம் எங்கும் புதைகுழிகளுக்குள் போட்டு மூடிய எங்களுக்கான நீதியையும் ஐநா பெருமன்றத்தில் தேடுவோம், வாருங்கள்! எங்கள் தேசம் வாழ்வுக்காக ஆயுதம் ஏந்திப் போராடியபோது, இறுக மூடியே கிடந்த நீதியின் கதவுகள், இப்போது எமக்காகத் திறக்கப்பட்டுள்ளன. எங்கள் குரல் அங்கே ஓங்கி ஒலிக்கவில்லையானால், இனப் படுகொலைக் கொலைகாரம் பாவிகளின் அசிங்கங்கள் அங்கீகாரம் பெற்றுவிடும். எங்கள் மக்கள் விடிவுக்கு வழியின்றி, வீணாக்கப்பட்டு விடுவார்கள். சிங்களத்தின் கோரப் பற்கள் எங்கள் நிலங்களைச் சூறையாடிவிடும். எங்கள் கல்வியும், கலாச்சாரமும், பொருளாதாரமும் சிங்களத்தின் காலடிக்குள் புதைந்துவிடும். நாம் போராடத் தவறிவிட்டால், தமிழனற்ற நிலமாகத் தமிழீழம் மாறிவிடும்!

உரிமைவேண்டி உயர்ந்த கரங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு அடிபணிந்து போகாது!


உரிமைவேண்டி உயர்ந்த கரங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு அடிபணிந்து போகாது! வெட்டப்பட்ட கரங்கள் வேகமுடன் வளர்கின்றன. முறிக்க முறிக்க முளைவிடும் மூர்க்கமான செடியைப் போல், கத்தரிக்கப்பட்ட கரங்கள் கணுக்களைப் பிரசவிக்கின்றன சிதைக்கப்பட்டவைகள் சிவப்பாக வெடிக்கின்றன. நெரிக்கப்பட்ட குரல்வளைகள் நெருப்பு வரிகளில் முற்றுகையை எதிர்த்து முழக்கமிடுகின்றன. சூடுபட்ட சுவாசப் பைகள், ஆக்கிரமிப்பாளனை அவிப்பதற்கு விடுதலை மூச்சை வெம்மையாக வெளியேற்றுகின்றன. இறந்து போனான் என எதிரியவன் எக்காளமிடுகையில், பிணங்கள் இங்கே பிறவி எடுக்கின்றன. அழிந்து போனவர்கள் என எதிரி ஆர்பரிக்கும் போதினிலே அடுத்த பிறவி எடுகின்றனர் எதிகளே..... துடிக்கப் பதைக்க வதைத்துக் கொல்லுங்கள்; அதனாலென்ன! துண்டிக்கத் துண்டிக்கத் துளிர்ப்பார்கள் வீரர்கள். வதைபட வதைபட வளர்வார்கள் எம் வீரர்கள் எங்கள் எல்லை விட்டு உங்கள் படைகள் ஓடும் வரை எங்கள் வீரர்க்கு இறப்பே இல்லை. உரிமைவேண்டி உயர்ந்த கரங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு அடிபணிந்து போகாது!

இன்னும் எம் தேசம் கண்ணீர் தேசம் தான்

சொந்த மண்ணில்
அடிமைகளான சோகங்கள்..
அந்நிய மண்ணில்
அகதிகளான பாரங்கள்...

தமிழனின்
வியர்வையில் விளைந்த
இலங்கைத் தீவு..
சிங்களனின்
குறுக்குப் புத்தியால்
இலக்காய் போனது !

லெமூரியா
பெற்றெடுத்த,
புதல்வர்களின் பட்டியலில்..
ஈழத் தமிழன் மட்டும் தான்
ஈனப் பிறவி ஆனானோ.?
அப்பாவித் தமிழினத்தின்
கனவு தேசம்
கண்ணீர் தேசம் ஆகியதோ.!

இலங்கையின்
இரத்த சகதியில் 
விளைந்த நறுமணங்கள்
கிராம்பும்,
ஏலக்காயும்,
ஜாதிக்காயும்,
தேயிலையும்,
இன்னும் சுடுகாட்டின்
வாசனையை சுமக்கிறது..?


நவீன ஹிட்லரின்
நாச வேலைகளால்,
உலகின் 'மாபெரும் மயானம்'
உறுதியாக ஊன்றப்பட்டுள்ளது
இனப் படுகொலையின்
மன சாட்சியாக .!

சிங்கள
முசோலினிகளின்
'மாயை வெற்றி'க்கு
அநாதை மழலைகளும்
விதவைத் தாய்களும்
சிதைந்த சொந்தங்களும்
விலையாகி நிற்கிறார்கள்...

வலப்புறம் போராளிகள்..
இடப்புறம் எதிராளிகள்..
நடுப்புறம் சிக்கிய 'அப்பாவிகள்'.!
இங்கு
இருபுறமும் புறப்பட்ட
'துப்பாக்கி தோட்டாக்கள்'
துளைத்துச் சிதறியது
அப்பாவிகளின் இதயத்தில்..?


கற்பழிப்பும்
கொலையும்
மனித வேட்டையும்
சித்திரவதையும்
இங்கு தேசிய விளையாட்டுகளாய்
மாறிப் போனது..!
ஈரணியினரும் விளையாட்டு
வீரர்களாய் மாறிப் போனார்கள்..? 

இங்கு
வானத்திலிருந்து
பொழிந்ததெல்லாம்
மூன்று மட்டும் தான்
வெடி குண்டுகள்..
உணவு பொட்டலங்கள்..
எப்போதாவது மழை.. !

இரவில்
குழந்தையை தூங்க வைக்க
'தாலாட்டு'ப் பாடிய தாய்,
காலையில் குண்டடிபட்டு
நிரந்தரமாய் தூங்கிப் போன
குழந்தைக்கு 'ஒப்பாரி'ப் பாடுகிறாள்
ஐயகோ தமிழா..


பிணங்களின் தேசத்தில்
பால் முகம் மாறாத பாலகனும்
பகடைக் காயானான்..
சுடுகாட்டு அரசனின்
பிணந்தின்னிக் கழுகுகளால்
உயிரற்றுப் போனான்...
ஐயோ தமிழா...

இங்கு
கொன்றொழிக்கப்பட்டது.
தமிழினம் மட்டுமல்ல..
யுத்த தர்மங்களும் தான் !

இப்படி
உதைத்தாலும்,
கொன்று சிதைத்தாலும்,
கேட்கத் துப்பற்றுப் போக
'தமிழன்' என்ற சொல் தான் காரணமா ?

"அழைக்கும் தூரத்தில்
'ஆறு கோடி' உறவுகள்
வாழ்ந்தார்களாமே..!
அழித்தொழிக்கப்பட்டு 
அனுதினமும் ஒலித்த
அன்பின் அழுகுரல் ஓலங்கள்..
அவர்களின் புலன்களில் விழவில்லையா.?
ஆத்திரத்தால் பொங்கி எழவில்லையா.?"
கேள்விக் கணை
தொடுக்க காத்திருக்கிறது..
எதிர் கால சரித்திரப் பக்கங்கள் !


உரிமைக்காக போராடி
உயிர்களை விதைத்திருக்கிறது
தமிழினம்..
அறுவடை செய்யப்படுமா
விரைவில் தமிழீழம்.!

இளைய பட்டாளமே..
சமர் கண்ட பூமியின்
சரித்திரம் மாற்றலாம் வா..
இந்திய இராஜாங்கத்தின்
பொய்யுறக்கம் கலைக்கலாம் புறப்படு...

சந்தர்ப்பவாத அரசியல் தொலைத்து
சர்வதேச சமாதானக் கரங்களை
பற்றிக் கொண்டு 'மத்திய அரசு'
சத்தியமிட்டுச் சொல்லட்டும்..
தனி ஈழம், தமிழனுக்கென்று.!

இல்லையெனில்
இலங்கைத் தமிழர்களின்
இறுதி யுத்தம்
இளகிப் போனாலும் கூட
இன்னும் இது
'கண்ணீர் தேசம்' தான்.!
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2013. tamil - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger